காட்பாடியில் திடீர் சோதனை..!! ரூ.18 லட்சம், அதிமுக சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பறிமுதல்..!!

காட்பாடியில் காட்பாடியில் உள்ள தனியார் உணவகத்தில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ18.41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சட்டப்பேரவைத் தோதலையொட்டி, வாக்காளா்களுக்கு வழங்க பணம், பரிசுப் பொருள்கள், மதுவகைகள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க பறக்கும் படை, நிலைக் கண்காணிப்புக் குழுவினா் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனா்.

இதையொட்டி, காட்பாடியில் உள்ள தனியார் உணவகத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் ரூ.18 லட்சத்து 41 ஆயிரத்து 300 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தவிர, சின்னம் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள், வாக்காளர் விவரம் அடங்கிய பூத் சிலிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அதிமுகவினர்‌ 8 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே