சேலத்தில் அதிரடி : ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்!

சேலத்தில் தலைக்கவசம் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படுவது வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

சேலத்தில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு முக்கிய சாலை வழியாக பயணிக்க அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டைப் பகுதியில் தலைக்கவசம் வியாபாரம் செய்து வரும் முகமது காசிம் என்பவர், வாடிக்கையாளர்களைக் கவர புதிய சலுகையை அறிவித்துள்ளார்.

அதன்படி தலைக்கவசம் வாங்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் இவரது கடையில் வாகன ஓட்டிகள் பலரால் தலைக்கவசம் ஆர்வமாக வாங்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே