தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 2 கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த தேர்தலில் அதிமுக 3,848 இடங்களிலும், திமுக 4,139 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.
இதில் 3,736 இடங்களில் இவ்விருக்கட்சிகளும் நேரடியாக போட்டியிட்டுள்ளன.
- முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 76.19 சதவீதம் வாக்குகளும்,
- 2ம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களில் 77.73 சதவீத வாக்குகளும் பதிவாகின.
- மறுவாக்குப்பதிவு நடைபெற்ற 30 வாக்குச்சாவடிகளில், 72.70 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
- இந்நிலையில், மொத்தம் 315 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கைகாக சுமார் 35,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.