தலித்களை துன்புறுத்தும் பா.ஜ. போன்ற கட்சிகளை நான் ஆதரிக்க மாட்டேன், நான் புலியை போன்றவள். யார் முன்னரும் தலைவணங்க மாட்டேன். மக்கள் முன் மட்டுமே தலைவணங்குவேன் என மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.

மேற்குவங்க மாநிலம், கரக்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது: அம்பான் புயல் பாதிப்பிற்கு பிறகு ஆயிரக்கணக்கான கோடி பணத்தை நாங்கள் வழங்கினோம். அப்போது பாஜக கட்சி எங்கிருந்தது.

அவர்கள், குதிரை பேரத்திற்காக மட்டுமே பணத்தை விநியோகம் செய்தனர்.

நீங்கள் சமையல் செய்யும் போது, கொள்ளைகாரர்கள் வந்தால், பாத்திரங்களை கொண்டு அடித்து அவர்களை விரட்டுங்கள். எங்களுக்கு கொள்ளைகாரர்கள் தேவையில்லை என அவர்களிடம் தெரிவியுங்கள்.

இந்த கூட்டத்தில், மாவோயிஸ்ட், இடதுசாரி அல்லது காங்கிரஸ் நண்பர்கள் இருந்தால், நீங்கள் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பா.ஜ.,வுக்கு ஓட்டுப்போட வேண்டாம். மக்களின் சக்தி மம்தா என்பது பா.ஜ.,வுக்கு தெரியும்.

அவர் மக்களுடன் இணைந்து தனியாக போராடுவார், தப்பி ஓட மாட்டார் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். நான் புலியை போன்றவன். யாருக்கும் நான் தலைவணங்க மாட்டேன். மக்களுக்கு முன் மட்டுமே தலைவணங்குவேன்.

பெண்கள், தலித்களை துன்புறுத்தும் பா.ஜ. போன்ற கட்சிகளை நான் ஆதரிக்க மாட்டேன்.

மேலும், வரும் தேர்தலின் போது பா.ஜ.க. பணம் விநியோகம் செய்யும். அப்போது, பணத்திற்கு தலைவணங்காதீர்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

அது பொது மக்களின் பணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே