கேரளாவை போல ஹிமாச்சல் மாநிலத்திலும் சினைப் பசுவிற்கு உணவுடன் வெடிமருந்து கொடுத்த அவலம்!

கேரளத்தில் அன்னாசிப் பழத்துக்குள் வெடிமருந்து வைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து சினைப் பசு ஒன்றுக்கு இதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜன்துட்டா பகுதியில் மே 26 அன்று சினைப் பசு ஒன்று கோதுமை மாவை உட்கொண்ட பின்னர் வாய் வெடித்து ரத்தம் வழிந்தது.

கோதுமை மாவு உருண்டைக்குள் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து வாய் சிதைந்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனது பக்கத்து வீட்டுக்காரர் வெடிபொருள்களால் நிரப்பப்பட்ட கோதுமை மாவு உருண்டையை அளித்ததாக பசுவின் உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஹிமாச்சலப் பிரதேச காவல்துறை இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தங்கள் பயிர்களை அழித்ததால் நில உரிமையாளர்கள், பசுவைக் கொல்ல முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே