ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் பதவியேற்றுக்கொண்டார்.
நடந்து முடிந்த ஜார்க்கண்ட்சட்டப்பேரவை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது.
இதனை அடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரன் இன்று அம்மாநிலத்தின் 11-வது முதல்வராக பதவியேற்றுக்கொண்ட்டார்.
ராஞ்சியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், சரத் யாதவ், டி ராஜா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர் பாலு ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ்-ம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
எதிர்க்கட்சிகளின் பலத்தை பறைசாற்றும் விதமாக இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.