மதுரையில் நியாயவிலைக் கடைகளில் மளிகைப்பொருட்கள் தொகுப்பு விற்பனை தொடக்கம்

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் 500 ரூபாய்க்கு 19 வகையான மளிகைப் பொருட்களின் தொகுப்பு வழங்கும் திட்டம் மதுரையில் தொடங்கப்படுகிறது.

ஊரடங்கு நேரத்தில் மக்களின் நலன் கருதி நியாய விலை கடைகளில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.

அதன்படி மதுரை மாவட்டத்தில் இருக்கும் பொன்மேனி பகுதியில் இருக்கும் நியாய விலை கடையில் இந்த திட்டத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

துவரம்பருப்பு, மிளகு, சீரகம் உள்ளிட்ட 19 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய ஒரு தொகுப்பு 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும் இருக்கும் நியாயவிலை கடைகள் மற்றும் கூட்டுறவு சங்கம் தொடர்பான கடைகளில் இந்த தொகுப்பு விற்பனை செய்யப்பட இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே