இன்று ட்விட்டர் ட்ரெண்டிங்கில் “ரஜினி ஒரு சகாப்தம்”!

டிவிட்டரில் திடீரென ரஜினி ஒரு சகாப்தம் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள், ரஜினிகாந்த் சுவாரஸ்ய தகவல்கள், அரசியல் தலைவர்களுடன் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.

40 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி திரைத்துறையில் இருந்து வரும் நிலையில், அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பேச்சு அவ்வப்போது எழுகிறது.

ஆனால், ரஜினி ரசிகர்கள் எப்போதும் அவர் தான் சூப்பர் ஸ்டார் என்ற ரீதியில் ஹேஷ் டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் விஜய், அஜித், தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில் அவர்கள் குறித்து ட்ரெண்ட் செய்து வந்த நிலையில், அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில் ரஜினி ரசிகர்கள் ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருவதாக தெரிகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே