கோயம்பேடு : 7,500 தொழிலாளர்களை கண்டறிய முயற்சி

கோயம்பேட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற 7,500 தொழிலாளர்களை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து சென்றவர்களின் தகவல்களை மாவட்ட நிர்வாகங்கள் பெற்று ஆய்வு செய்து வருகின்றன.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 160ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 107 பேருக்கு தொற்று உறுதி, 107 பேரும் கோயம்பேட்டில் இருந்து கடலூர் வந்தவர்கள்.

இதுவரை கோயம்பேட்டில் இருந்து வந்த 129 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கோயம்பேட்டில் இருந்து வந்த மேலும் 430 பேருக்கு கொரோனா பரிசோதனை தொடர்கிறது.

கோயம்பேட்டில் இருந்து கடலூர் திரும்பிய மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது. 

கோயம்பேட்டில் இருந்து திரும்பிய 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 55 ஆக அதிகரிப்பு.

26 பேர் சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், 3 பேர் புதுச்சேரி ஜிப்மர் மலுத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

26 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், 500 பேரின் முடிவு வர வேண்டியுள்ளது.

இஎஸ்ஐ மருத்துவமனையில் மேலும் 4 பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது.

ஏற்கெனவே ஆண் பயிற்சி மருத்துவருக்கு கொரோனா உறுதியானது. துப்புரவு தொழிலாளர் உட்பட மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டிருகிறது.

சென்னை திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் அம்மா உணவக பெண் பணியாளருக்கு கொரோனா உறுதி செய்ய பட்டிருக்கிறது.

அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இவரது வீடு இருப்பதால் நோய்த்தொற்று பரவி இருக்கலாம் எனத் தகவல் வெளியானது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளி​ல் 39 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது! ஏற்கெனவே 86 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் மேலும் 39 பேருக்கு பாதிப்பு உறுதியானது.

கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் இது தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே