மத்திய பிரதேசம் ராஜ்யசபா உறுப்பினராக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தோந்தெடுக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கடந்த ஜூலை மாதம், கா்நாடக மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, காலியான அந்த இடத்துக்கு அக்., 4ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக சமீபத்தில் மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக பொறுப்பேற்ற எல்.முருகனை பா.ஜ., தலைமை அறிவித்தது.
இதனையடுத்து ம.பி.,யில் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியின்றி ராஜ்யசபா உறுப்பினராக தேர்வானதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.