நவம்பர் 10ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்

நவம்பர் பத்தாம் தேதி திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் திரு.க.அன்பழகன் அறிவித்திருக்கிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்து ஒத்திவைக்கப்பட்ட திமுக பொதுக்குழுக்கூட்டம் நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் உள்ள அரங்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள க.அன்பழகன், இந்தக் கூட்டத்தில் கட்சியின் சட்டதிட்ட திருத்தம், ஆக்கப்பணிகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே