பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, ஜனவரி 2 ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கங்குலியின் ரத்த ஓட்டம் சீராக உள்ளதாகவும், அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இதனையடுத்து கங்குலி விரைவில் மீண்டு வர வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் “மீண்டு வாருங்கள் தாதா” என கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் பதிவிட்டு வருகின்றனர். 

தற்பொழுது சவுரவ் கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே