முதல்வர் நாராயணசாமிக்கு உண்மையான பேய் யார் என்று அடையாளம் காண்பிக்க தான் தயாராக இருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
தன்னை பேய் என்று குறிப்பிட்டு பேசிய புதுச்சேரி முதல்வரை கண்டித்து முன்னரே கிரண்பேடி கடுமையாக பதிலளித்திருந்தார்.
இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரண்பேடி, பேய் எந்த மரத்தையும் நடாது. புதுச்சேரியை பசுமையாக்காது.
வாய்க்கால் கால்வாய்களை தூய்மைப்படுத்தாது என கூறியுள்ளார்.
மேலும், முதல்வர் தவறாக பேய்யை அடையாளம் கண்டுள்ளார் எனவும், புதுச்சேரியில் முதியவர்களை மிரட்டி நிலங்களை அபகரிப்பவர்கள்தான் பேய்கள் என்றும், அவர்களை ரௌடிகள் எனவும் கூறுவோம் என்று தெரிவித்துள்ள கிரண்பேடி, அவர்கள் தற்போது கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.