படிப்பதற்காக சென்னை வந்த இளைஞரை ஏமாற்றி அவரிடம் பணத்தை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுக வட்ட செயலாளரும், அவருடைய மகனான சினிமா நடிகரும் கைது செய்யப்பட்டனர்.
திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர், திமுக 114 ஆவது வட்ட செயலாளராக உள்ளார். இவரது மகன் கவித்திறன். நம்ம கதை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு கவித்திறனுக்கும், சென்னை கல்லூரியில் படிப்பதற்காக வந்த மூர்த்தி என்பதற்கு நட்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது தந்தையின் மருத்துவ செலவுக்காக என்று கேட்டு மூர்த்தி இடம் இருந்த ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாயை கவித் திறன் பெற்றதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு எத்தனை முறை பணம் கேட்டும் கவித்திறன் கொடுக்காததால், விரக்தியில் ஆழ்ந்த மூர்த்தி சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு சென்று கூலி வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையே வெள்ளிக்கிழமை அன்று கவித்திறன் வீட்டுக்கு சென்று பணத்தை கேட்ட மூர்த்தியை தந்தை கண்ணனும், கவித்திறனும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.