குடியிருப்புக்குள் நடமாடும் ஒற்றை காட்டு யானை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாலையை கடந்த ஒற்றை யானையை ஆபத்தை உணராமல் பொதுமக்கள் செல்பி எடுக்க முயன்றனர்.

நொகனூர் என்னும் அடர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை அத்திக்கோட்டை என்னுமிடத்தில் சாலையை கடந்து தேன்கனிக்கோட்டை வனப் பகுதிக்குள் நுழைந்தது.

ஒற்றை யானையை காண திரண்ட மக்கள், அருகில் சென்று புகைப்படம் எடுப்பதும், ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கவும் முயன்றனர்.

நொகனூர் காட்டில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை அத்திக்கோட்டை சாலையை கடந்து, சானமாவு பகுதிக்குச் சென்றது.

இந்நிலையில் யானைகளின் அருகில் செல்ல வேண்டாம் விரட்ட முயற்சிக்க வேண்டாம் எனவும் யானைகளை பார்த்ததும் உடனே தகவல் அளிக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே