தீபாவளி பண்டிகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு

தீபாவளி பண்டிகையை ஒட்டி தூத்துக்குடியில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக ஹலோ போலீஸ் எனும் கண்காணிப்பு வாகனத்தை தூத்துக்குடி டி.எஸ்.பி பிரகாஷ் துவக்கிவைத்தார்.

தூத்துக்குடி நகரின் முக்கிய பகுதிகளான பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து அதிகமாக இருக்கும் பன்னிரெண்டு இடங்களில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் காவலர்கள் ரோந்து பணி நடைபெற்று வருகிறது.

சீருடை இல்லாத காவலர்களும் ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே