தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.
நாளை அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது.
அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளுகிறார்.
காலை ஆறு முப்பது மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. இதனையடுத்து பக்தர்கள் கடலில் புனித நீராடி சஷ்டி விரதத்தை தொடங்குகின்றனர்.
வருகின்ற இரண்டாம் தேதி மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது.
அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.