தோனிக்கு மசாஜ் செய்யும் ஸிவா தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மகள் ஸிவா தந்தைக்கு மசாஜ் செய்யும் வீடியோ வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

உலக கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பின் தோனி பெரும்பாலான நேரங்களை தனது குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார்.

அவ்வப்போது செல்ல மகளுடன் கிடைக்கும் நிகழ்ச்சி நிகழ்வுகளை தோனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

அண்மையில் ஸிவா தனது தந்தையின் உடல் களைப்பை போக்க தோள்பட்டையை நீவி விடுவதும், அதனை ரசித்துக் கொண்டிருப்பதுமான வீடியோ ஸிவாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியானது.

இதனை கண்டு ரசித்த 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடியோவை லைக் செய்ததோடு ஸிவாவின் செயலை ஆச்சரியத்துடன் பாராட்டினர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே