ஜகமே தந்திரம் – நியூ அப்டேட்

‘ஜகமே தந்திரம்’ படத்தின் புதிய போஸ்டருடன் ரிலீஸ் குறித்த தகவலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

பேட்ட படத்தை அடுத்து தனுஷின் 40-வது படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

லண்டனில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி மாதத்திலேயே படப்பிடிப்பு முடிவடைந்து மோஷன் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருந்தது.

அதில் மே 1-ம் தேதி ஜகமே தந்திரம் திரைப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது.

இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டிருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்,

ஜகம் சுகமடைந்ததும்…
ஜகமே தந்திரம் என்று தலைப்பிட்டு விரைவில் படம் திரைக்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த கொடிய வைரஸ் தொற்று பரவல் இல்லாமல் இருந்தால் இன்று ஜகமே தந்திரம் திரைக்கு வந்திருக்கும் என்றும் கார்த்திக் சுப்புராஜ் தனது பதிவில் தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே