ManVsWild-ல் பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த்! (புகைப்படம்)

பேர் கிரில்ஸ் இயக்கும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி உலகளவில் மிகப் பிரபலமான நிகழ்ச்சி.

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் சில மாதங்களுக்கு பிரதமர் மோடி பங்கேற்றார்.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் ரஜினிகாந்த் 2 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஷூட்டிங்கின் போது அவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் பரவின.

இந்நிலையில், ஷூட்டிங் முடிந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் தனது காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும், முள் குத்தியதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், மேன் வெர்சஸ் வைல்ட்டில் பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இக்கட்டான சூழ்நிலைகளில் உயிர் பிழைத்திருப்பதற்கான வழிமுறைகளை சொல்லும் இந்நிகழ்ச்சி, விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கடந்த ஆகஸ்டு மாதம் பிரதமர் மோடி கலந்து கொண்டு பியர் கிரில்சுடன் காடுகளில் பயணம் செய்தார். இது டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது.

மோடியை போலவே ரஜினியும் தன் வாழ்க்கை குறித்து பியர் கிரில்சுடன் பேசுவது போல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே