கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மே -3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், பரிந்துரைகள் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.