நாளை பிறையை எதிர் பார்க்கும் இஸ்லாமியர்கள்…

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான், வரும் வெள்ளி அன்று தொடங்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் இருக்கிறது. இந்த மாதத்தில் அவர்கள் நோன்பு இருப்பது வழக்கம்.

பிறை தெரிவதன் அடிப்படையில் இந்த ரமலான் மாதம் தொடங்குவது அறிவிக்கப்படும்.

பிறை தெரியும் நாள் நாட்டுக்கு நாடு மாறுபடும். எனினும், வரும் வெள்ளி அன்று (ஏப்ரல் 24) ரமலான் தொடங்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஐக்கிய அமீரகத்தில் நாளை, பிறை பார்க்கும் குழு கூடி இது தொடர்பாக முடிவெடுக்க உள்ளது.

மற்ற ஆண்டுகளைப் போல இல்லாமல், இந்த ஆண்டில் கொரோனா பாதிப்பு காரணமாக, ரமலான் நோன்பு சற்று சிரமத்தை அளிக்கலாம்.

இந்தியாவில் கூட, ரமலான் தொழுகையை வீட்டிலேயே மேற்கொள்ள இஸ்லாமிய தலைவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே