இன்று சென்னை ஆலந்தூர் பகுதியில் தவ்ஹீத் ஜமாத் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களது குடும்பத்தாருடன் ஆலந்தூர் பேருந்து பணிமனையில் இருந்து பேரணியாக போராட்டம் நடத்தி செல்கின்றனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் சென்னயைில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாத் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய இந்த பேரணியில் பெண்கள், குழந்தைகள் உட்பட 10000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை ஆலந்தூரிலிருந்து – ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்வதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தபோதும் இஸ்லாமிய அமைப்புகள் பேரணி நடத்தி வருகின்றனர்.
இந்த பேரணியில் பங்கேற்றவர்கள் 650 அடி நீளம் கொண்ட தேசியக்கொடியை ஏந்தியபடி சென்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் வலுத்துவரும் நிலையில் தமிழகத்திலும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருகிறது.