எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேல், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கு, OTP முறை ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி, பணத்தை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற நூதன திருட்டுக்களை தடுக்கும் விதமாக, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க ரகசிய எண்ணை பயன்படுத்தும் முறையை ஜனவரி 1ம் தேதி முதல் எஸ்பிஐ அறிமுகம் செய்ய உள்ளது.
இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை, இத்திட்டம் அமலில் இருக்கும்.
ரகசிய எண் வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும்.
எனினும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இதர வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கு இத்திட்டம் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.