தர்பார் படத்தில் சசிகலா குறித்து மறைமுக விமர்சனம் : அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு

தர்பார் படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களில் நல்ல கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைபடம் இன்று வெளியாகியுள்ளது.

பலரும் தர்பார் குறித்து பேசிவரும் நிலையில், தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தர்பார் பற்றி பேசியுள்ளார்.

மேலும் சென்னை திருவொற்றியூரில் பொங்கல் பரிசுகளை வழங்கிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

தர்பார் படத்தில் சிறைச்சாலை தொடர்பாக வசனம் ஒன்று உள்ளதாகவும், இது சசிகலா பற்றிய கருத்தாக இருக்கும் என்றும், அது நல்ல கருத்துதான் எனவும் கூறியுள்ளார்.

4 நாட்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவதால் பொதுமக்கள் அதிகாலையிலேயே வரவேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே