ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கிடையாது – மத்திய அரசு

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமில்லை என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

இதுத்தொடர்பாக ஆளும் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் புதுச்சேரி அதிமுக எம்.பி கோகுலகிருஷ்ணன், மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

அதில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 9-ன் கீழ், இரட்டை குடியுரிமை வழங்க இயலாது என்றார்.

எனவே இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்காக ஒப்பந்தம் செய்யும் திட்டம் எதுவுமில்லை என்றும் உள்துறை இணையமைச்சர் தெரிவித்திருக்கிறார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே