இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் வீழ்ச்சியுடன் தொடங்கியது.

ஒருசில வங்கிகள், நிதி நிறுவனங்களின் பங்கு மதிப்பு வீழ்ச்சியடைந்தது.

கொரோனாவால் கடும் வீழ்ச்சியைச் சந்தித்த இந்தியப் பங்குச்சந்தைகள் படிப்படியாக மீட்சியடைந்து வருகின்றன.

எனினும் இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் இருந்தே பங்குச்சந்தைகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.

பகல் 10.40 மணியளவில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 276 புள்ளிகள் சரிந்து 38 ஆயிரத்து 90 ஆக இருந்தது.

தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 82 புள்ளிகள் சரிந்து 11 ஆயிரத்து 235 ஆக இருந்தது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே