இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு, கடற்படை வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படையின் 48-ஆம் ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னம் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டுவருகிறது.
போர் நினைவுச் சின்னத்தில் கடற்படை தளபதி கரம்பீர் சிங் மற்றும் கடற்படை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
கடற்படை தினத்தையொட்டி கடற்படை வீரர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கடற்படை தினத்தில், நமது கடற்படை வீரர்களுக்கு அனைவரும் வணக்கம் செலுத்துவோம்; கடற்படை வீரர்களின் மதிப்புமிக்க சேவையும், தியாகமும் நம் தேசத்தை வலுவாகவும், பாதுகாப்பாகவும் ஆக்கியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.