பீகார் மாநிலத்தில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் – பிரதமர் மோடி

“தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக சிலர் வதந்திகளை பரப்பி, தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர்; ஆனால் அது பலிக்காது; தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் முடிவு செய்து விட்டனர்!” – பிரதமர் மோடி

பீகார் மாநிலத்தில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் சசாரம் நகரில் பியாடா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

இதில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பிசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பிகார் சமீபத்தில் தனது இரண்டு மகன்களையும் இழந்தது.

ராம்விலாஸ் பாஸ்வான் தமது இறுதி மூச்சுவரை தன்னுடன் இருந்தவர். அவர் தமது முழு வாழ்க்கையையும் ஏழை மற்றும் பட்டியலின மக்களின் நலனுக்காகவே அர்ப்பணித்தார்.

இதேபோல், பாபு ரகுவன்ஷ் பிரசாத் சிங்கையும் பிகார் இழந்துள்ளது. அவரும் ஏழைகளின் நலக்காக மட்டுமே பணியாற்றி வந்தார். அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.

பிகார் மகன்கள் கால்வான் பள்ளத்தாக்கில் தங்கள் உயிர்களை இழந்து, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால் பாரதமாதா தலைநிமிர்ந்து நிற்கிறாள்.

மேலும், புல்வாமா தாக்குதலிலும் பிகார் மாநிலத்தைச் சேர்நத வீரர்கள் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்தனர். அவர்களது காலடியில் தலைவைத்து நான் மரியாதை செலுத்துகிறேன் என்று கூறினார்.

அத்துடன் கொரோனா குறித்து பீகார் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு உள்ளது .ஆனாலும் சிலர் மக்களை தவறாக வழி நடத்துகின்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே