மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு நீடிப்பு!

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான தொகுதிகள் தனித் தொகுதி என்ற பெயரில் அழைக்கப்படும் நிலையில், இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான ஆணை வரும் ஜனவரி 25-ம் தேதியுடன் காலாவதியாகிறது.

இந்த நிலையில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு தேர்தலில் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மேலும் 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் இட ஒதுக்கீடு நீடிக்கும் என கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே