டெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 960 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 960 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

டில்லியில், தப்லிக் – இ – ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டினர்களை கருப்பு பட்டியலில் வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

டில்லியில், நிஜாமுதீன் பகுதியில், தப்லிக் – இ – ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில், மார்ச், 8 – 10ம் தேதிகளில், பிரசங்க கூட்டம் நடந்தது.

இதில் மலேஷியா, வங்கதேசம், இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ‘ஓரிடத்தில் அதிகமானோர் கூடக் கூடாது’ என, டில்லி போலீசார் விதித்த தடையை மீறி, இந்த கூட்டம் நடைபெற்றது.

டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து பிரசங்க கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்திய விசா சட்ட விதிகளை மீறியதாக 960 பேரின் சுற்றுலா விசாக்களை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஏப்ரலில் ரத்து செய்தது.

இதை தொடர்ந்து இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், விசா ரத்து செய்யப்பட்ட 960 வெளிநாட்டினரின் பெயர்கள் கருப்பு பட்டியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இவர்கள் 10 வருடங்கள் இந்தியாவிற்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே