இந்தியா – தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி, மயங்க் அகர்வால் முதல் சதம் அடித்து அசத்தல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் மயங்க் அகர்வால், சதம் அடித்துள்ளார்.

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஃபிரீடம் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடர், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி, விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் குவித்த மழை குறுக்கிட்டதால், முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

மறுமுனையில் விளையாடிய மயங்க் அகர்வால், 84 ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்று இரண்டாவது நாள் ஆட்டத்திலும் ரோகித் – மயங்க் அகர்வால் ஜோடி நிதானமாக தொடர்ந்தது.

அவ்வப்போது அதிரடி காட்டிய மயங்க் அகர்வால், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது முதலாவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே