பச்சிளம் குழந்தையை ஒற்றைக் கையால் ஆட்டியபடி புகை பிடித்த பெண்

அமெரிக்காவில் ஒரு மாதக் குழந்தையை கையில் ஆட்டியபடி புகைப்பிடித்து அதனை முகநூலில் நேரலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

டென்னிஸி மாகாணத்தைச் சேர்ந்தவர் டைப்ரஸா செக்ஸ்டன் என்ற பெண் தனது முகநூலில் நேரலையில் தான் புகைப்பிடிப்பதை பகிர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது தனது ஒரு மாதப் பிஞ்சுக் குழந்தையை ஒற்றைக் கையால் தூக்கிப்பிடித்தபடி மேலும் கீழுமாக ஆட்டிக் கொண்டே புகைபிடித்தார்.

டைப்ரஸாவின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பச்சிளம் குழந்தையின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக டைப்ரஸாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே