தூய்மையான ரயில்நிலையங்கள் பட்டியலில் ஜெய்ப்பூர் முதலிடம்

நாட்டிலேயே தூய்மையான ரயில் நிலையங்கள் பட்டியலில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.

ஆண்டு தோறும் இந்தியாவின் தர கவுன்சில் வெளியிடும் ஸ்வஜ் ரயில் ஸ்வஜ் பாரத் அறிக்கையின்படி, மொத்தம் ஆயிரம் புள்ளிகளுக்கு 931.75 புள்ளிகள் எடுத்து முதலிடத்தை ஜெய்ப்பூர் தக்கவைத்துள்ளது.

மேலும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஜோத்பூர், துர்காபுரா ரயில்நிலையங்களும் முறையே 2 ஆவது மற்றும் 3 ஆவது இடங்களை பிடித்துள்ளன.

அதேபோல் சிறந்த ரயில்வே மண்டலங்கள் பட்டியலில் வடமேற்கு ரயில்வே, தென்கிழக்கு மத்திய ரயில்வே, கிழக்கு மத்திய ரயில்வே முதல் 3 இடங்களை பிடித்துள்ளன.

நாடு முழுவதும் உள்ள 17 மண்டலங்களுக்கு கீழ் 8 ஆயிரம் ரயில் நிலையங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. இவற்றில் இந்த ஆண்டு 720 ரயில் நிலையங்களும், முதல் முறையாக புறநகர் ரயில் நிலையங்களும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே