மாஸ் எண்ட்ரி கொடுத்த தோனி…! அதிர்ந்த சேப்பாக்கம்…

இன்னும் 27 நாட்கள் இருக்கும் நிலையில் சென்னை வந்தடைந்த தோனி நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது பயிற்சியைத் தொடங்கியுள்ளார். 

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு மைதானத்திற்கு சற்று ஓய்வு கொடுத்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி.

மேலும் இதனைத் தொடர்ந்து  இந்திய அணி விளையாடிய தொடர்களில் தொடர்ந்து தோனி புறக்கணிக்கப்பட்டு வந்தார்.

இதனால் மீண்டும் தோனியை களத்தில் பேட்டுடனும், கீப்பிங் கிளவுடனும் சந்திப்போமா என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் உருவாகியது. 

இந்நிலையில் தான் சென்னை வந்துள்ள தோனி ஐ.பி.எல் போட்டிக்காக 8 மாதங்களுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கினார்.

இக்காட்சியைப் பார்த்த ரசிகர்கள் தல தரிசனம் என  மைதானம் அதிர உற்சாக குரல் எழுப்பினர்.

கடந்த ஐ.பி.எல் தொடரின் இறுதி ஆட்டத்தில் ரோஹித் தலைமையிலான மும்பை அணியிடம் தோல்வியடைந்து கோப்பையைத் தவற விட்ட, தோனி இம்முறை தொடக்க ஆட்டத்திலேயே பழிதீர்க்க காத்துக்கொண்டிருக்கிறார்.

தோனியுடன் இணைந்து முரளி விஜய், சாவ்லா அசீஃப், ராயிடு, கரண் ஷர்மா உள்ளிட்டோரும் பயிற்சியை மேற்கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே