மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக இறுதிப்போட்டியில் இந்தியா!

மகளிர் T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில், வியாழக்கிழமை இந்தியா,இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டி, இந்திய நேரப்படி, காலை 9.30 மணிக்கு சிட்னியில் துவங்கும். டி – டுவென்டி உலக கோப்பை போட்டியில் இந்தியா, இதுவரை இறுதி போட்டிக்கு முன்னேறியது இல்லை.

எனவே, இந்தப் போட்டி, இந்திய வீராங்கனைகளுக்கு ஒரு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில், பிற்பகல் 1.30 மணிக்கு, ஆஸ்திரேலிய அணியை, தென் ஆப்பிரிக்கா எதிர்கொள்கிறது.

உலக கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்யும் இறுதிப்போட்டி, மகளிர் தினமான 8 ம் தேதி, நடைபெறுவது சிறப்பம்சமாகும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே