மேற்குவங்க மாநிலத்தில் நாய் படத்துடன் முதியவருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முர்சிதாபாத் மாவட்டம் ராம்நகர் கிராமத்தை சேர்ந்த 64 வயதாகும் சுனில் கர்மாகர், தனது வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தத்துக்கு விண்ணப்பித்திருந்தார்.

இதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட புதிய அட்டையில் கர்மாகர் புகைபடத்துக்கு பதிலாக நாயின் படம் இருந்துள்ளது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த கர்மாகர், தேர்தல் அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்தார்.

இதையடுத்து அந்த அட்டையை வாங்கிக் கொண்டு, நாய் படத்தை நீக்கி, வேறு அட்டையை அளிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் திருத்தம் செய்யும்போது நேரிட்ட தவறால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே