மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை தொடங்கினார் நடிகர் ரஜினிகாந்த்

கோடம்பாக்கம், சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கட்சி தொடங்குவது குறித்து நடிகர் ரஜினி ஆலோசனை நடத்தி வருகின்றார்.

கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நடிகர் ரஜினி தான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்தார்.

இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது.

கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு மீண்டும் இன்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெருகிறது.

தமிழகம் முழுவதும் 37 மாவட்ட செயலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள்.

கூட்டத்தில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், கட்சியின் கொள்கை, கட்சி தொடங்குவது குறித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் நிலைபாடு குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தின் முடிவில் ரஜினி முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

தான் அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினி அறிவித்த பிறகு அவரை பாஜக-வுடன் இணைத்து அரசியல் கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன.

குடியுரிமை திருத்த சட்டம் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடிகர் ரஜினிகாந்தை அவரின் இல்லத்தில் சந்தித்த மத குருமார்கள் விளக்கமளித்தனர்.

அதே போல் அடுத்த மாதம் 14-ம் தேதி ரஜினி கட்சி தொடங்குவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூழலில் நடைபெரும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியதுவம் வாய்ந்த கூட்டமாக கருதப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே