மும்பை தாராவியில் புதிதாக மேலும் 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து மும்பையின் குடிசைப் பகுதியில் கரோனா பாதிப்பு 60 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று கரோனா பாதித்தவர்கள் இரண்டு பேர் மரணம் அடைந்த நிலையில், தாராவியில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உள்ளதாக பிரிஹன்மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான, தமிழர்கள் அதிகளவு வசிக்கும் மும்பை தாராவியில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இங்கு நேற்று மட்டும் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 5 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு கரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் அப்பகுதியில் கரோனாவுக்கு இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.