தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் வெளவால்களுக்கு கொரோனா

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது.

இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில் இதுவரை 11, 436 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 337 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பல ஆய்வறிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட சில இன வௌவால்களின் தொண்டை மற்றும் மலக்குடல் பகுதி மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தபட்டது.

இந்த ஆய்வு முடிவில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, இமாச்சல பிரதேசம் மாநிலங்களில் உள்ள இருவகை இன வௌவால் மாதிரிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கர்நாடகா, சண்டிகர், குஜராத், ஒடிசா, பஞ்சாப், தெலுங்கானா மாநிலங்களில் எடுக்கபட்ட வௌவால் மாதிரிகளில் கொரோனா தொற்று இல்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவுமா என ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து, மற்ற விலங்குகளிலும் கொரோனா பாதிப்பு குறித்த ஆய்வு நடத்தப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கபட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே