பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

பெரியாறு பகுதியில் 19.6 மில்லி மீட்டர் மழையும், தேக்கடியில் 31 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் 124 அடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 3,420 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு விநாடிக்கு 1,400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தொடர்ந்து அணைப்பகுதிகளில் மழை பெய்தால் தேனி, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் தேவை பூர்த்தி அடைவதோடு, விவசாயமும் செழிப்பாக நடைபெறும். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே