ரூ. 1000 கோடி பட்டாசுகள் தேக்கம்..; வேதனையில் உற்பத்தியாளர்கள்..!!

சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளில் இந்த ஆண்டு 1000 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளன.

சிவகாசியில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக 2300 கோடி ரூபாய் அளவிலான பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு அவற்றில் 90 சதவீதம் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டன.

இந்நிலையில் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதன் காரணமாக வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படவிருந்த பட்டாசுகளில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அதாவது 45 சதவீத பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வெளிமாநிலங்களில் பட்டாசுகள் தேக்கம் அடைந்துள்ளதால் அவர்கள் அதையே அடுத்த ஆண்டு விற்கலாம், அல்லது திருப்பி அனுப்பிவிடக்கூடும் என வேதனை தெரிவிக்கும் பட்டாசு உற்பத்தியாளர்கள், இதன் விளைவாக அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு உற்பத்தி பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே