புரோ கபடிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு பெங்கால் வாரியர்ஸ் முன்னேற்றம்

புரோ கபடி லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு பெங்கால் வாரியர்ஸ் அணி முன்னேறியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் யு மும்பா அணிகள் மோதின.

தொடக்கத்தில் இருந்தே பெங்கால் வாரியர்ஸ் வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் அந்த அணி முதல் பாதியில் 18-12 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாவது பாதியில் யு மும்பா அணி வீரர்கள் கடுமையாகப் போராடிய போதும், இறுதியில் 37-35 என்ற புள்ளிக் கணக்கில் பெங்கால் அணி வெற்றி பெற்றது.

வரும் சனிக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் தபாங் டெல்லி மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே