தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து சமீபத்தில் சென்னை போரூருக்கு திரும்பிய இருவர் சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் அவர்களுக்கு எடுத்த ரத்த மாதிரி சோதனையில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
இதனை அடுத்து மருத்துவர்கள் குழு அவர்கள் இருவரையும் டிஸ்சார்ஜ் செய்ய முடிவு செய்துள்ளது.
இருப்பினும் இருவரும் தங்களது வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்களது உடல் நிலையை அவ்வப்போது மருத்துவர்கள் கண்காணிப்பார்கள் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து இதுவரை கொரோனா வைரசால் தமிழகத்தில் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 40 ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.