தொழிலதிபர் சிவசாமி வீட்டில் 2வது நாளாக வருமான வரி சோதனை

கரூரில் தொழிலதிபர் வீட்டில் இருந்து 32 கோடி ரூபாய் பணத்தை வருமானவரித் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கரூரைச் சேர்ந்த சிவசாமி என்பவர் ஷோபிகா இம்பெக்ஸ் என்னும் கொசுவலை தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

முறையாக வரி செலுத்தாத நிலையில், சிவசாமிக்கு சொந்தமான வீடு மற்றும் ஆலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது வீட்டில் துணி அடுக்கும் அலமாரியில், 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், அவற்றின் மதிப்பு 32 கோடி ரூபாய் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நீடிக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே