கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பதியில் தடம்புரண்டது

டில்லியில் இருந்து திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்த கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு கம்பார்ட்மென்ட் திருப்பதியில் தடம்புரண்டது.

டில்லியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்த கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு கம்பார்ட்மென்ட் ரேணிகுண்டா அருகே இருக்கும் ஏற்பேடு ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது ரயிலில் ஒரு கம்பார்ட்மெண்டின் சக்கரம் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டது.

ரயில் பெட்டி ஒன்று தடம்புரண்டதை உணர்ந்த இன்ஜின் டிரைவர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு ரயிலை நிறுத்தியதால் ஏற்படவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ரயில் பெட்டி தடம்புரண்டது பற்றிய தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள், ரயில்வே போலீசார் ஆகியோர் விரைந்து சென்று தடம்புரண்ட ரயில் கம்பார்ட்மென்ட்டை மீட்டு சரி செய்து ஓட வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.

ரயிலை சரி செய்வதற்காக ரேணிகுண்டாவில் இருந்து பழுது நீக்குவதற்கு தேவையான உபகரணங்களுடன் கூடிய ரயில் வர வைக்கப்பட்டது.

இதனால் அந்த பாதையில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

ரயில் பெட்டி தடம் புரண்டாலும் ரயிலில் இருந்த பயணிகள் பத்திரமாக இருப்பதாகவும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே