இரண்டு நாட்களில் தக்காளி விலை ரூ.17 குறைவு

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இரண்டு நாட்களில் கிலோவுக்கு 17 ரூபாய் குறைந்துள்ளது.

நாட்டு தக்காளி நேற்று கிலோவுக்கு 14 ரூபாய் வரை குறைந்து, கிலோ 16 முதல் 21 ரூபாய் வரை விற்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மேலும் மூன்று ரூபாய் குறைந்து, 13 ரூபாய் முதல் 15 ரூபாய்க்கு விற்பனை நடைபெறுகிறது.

ஆந்திரா கர்நாடகா பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாக தெரிகிறது.

மேலும் விலை ஏற்றத்தால் விற்பனை குறைந்து இருந்த நிலையில், அதனைஅதிகரிக்கும் நோக்கில் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே