இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா நடைபெற்றது.
கமுதி அருகே உள்ள முதல் நாடு கிராமத்தில் உள்ள எல்லை பிடாரி அம்மன் பீடத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவிழா நடைபெறும்.
முழுக்க முழுக்க ஆண்களே பங்குபெறும் விழாவில் 100 செம்மறி ஆடுகள் பலியிடப்பட்டன.
மேலும் சாதம் உருண்டைகளை அம்மனுக்கு படையலிட்ட ஆண்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
இந்த விழாவில் கமுதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.