விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப மாணவர்கள் திறனை மேம்படுத்தி கொள்க – பாரிவேந்தர் எம்.பி

மாணவர்கள் காலநிலைக்கு ஏற்ப தங்களின் அறிவு திறனையும் நிர்வாக திறனையும் வளர்த்துக் கொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம் என பட்டமளிப்பு விழாவில் எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி தெரிவித்துள்ளார்.

எஸ்ஆர்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 23 ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் மாநில அரசின் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் நிறுவனரும், வேந்தருமான பாரிவேந்தர் எம்.பி., நிகழ்ச்சியில் 518 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.

விழாவில் பேசிய அவர், விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே