தமிழகத்தில் 1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-
“தமிழகத்தில் 1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. 1ஆம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தனியார் பள்ளிகள் கேட்டு வருகின்றனர்.
ஆனால், பெற்றோர்கள் மத்தியில் கொரோனா தொற்று அச்சம் இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை. கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதை பொருத்தே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்.”
இவ்வாறு அவர் கூறினார்.